» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிஏஏ விவகாரத்தில் மாணவர்கள், இஸ்லாமியர்களை சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன: ரஜினி

புதன் 5, பிப்ரவரி 2020 11:35:42 AM (IST)

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.  சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக போரட்டங்களை தூண்டி விடுகின்றன என நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், 2010இல் காங்கிரஸ் அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை ஏற்படுத்திவிட்டது. எனவே நாட்டு மக்களை அடையாளம் காணும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியமானது. இதில் யாருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. குடியுரிமைத் திருத்த சட்டத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துவிட்டது. 

எனவே இதனால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படப்போவதில்லை. இதர நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்தியக் குடியரிமை வழங்குவது தொடர்பான நடைமுறையாகவே அமைந்துள்ளது. ஆனால், ஒருவேளை இதனால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தேவையற்ற பீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினையின் போதும் இந்தியாவை தனது தாய்நாடாக ஏற்றுக்கொண்டு இருக்க முன்வந்த இந்திய இஸ்லாமியர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் முதல் ஆளாக நான் போரடுவேன். 

இதில் சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்காக இஸ்லாமியர்களை தூண்டுகிறது, இதற்கு அந்த மதகுரு சிலரும் துணைபோகிறார்கள். இது மிகவும் தவறானது. மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு முன் தங்களுடைய ஆசிரியர்கள், முன்னோர்களிடம் தீர கலந்து ஆலோசித்த பின்னர் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் அரசியல்வாதிகள் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். முழு விவரம் அறியாமல் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதனால் சோழர் காலம் முதல் இலங்கையில் உள்ள தமிழர்களை தொந்தரவு செய்யக்கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை. அதில் எனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக உள்ளேன். நான் முறையாக வரி செலுத்தி வருகிறேன். சட்டவிரோதமாக இதுவரை எந்த காரியத்தையும் செய்ததில்லை என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

MakkalFeb 6, 2020 - 01:31:24 PM | Posted IP 108.1*****

நல்லது யார் சொன்னாலும் கேளுங்க தம்பி

Pachai tamilanFeb 5, 2020 - 01:16:18 PM | Posted IP 162.1*****

Rajini fan ya pa ne orama poi vilaiyadu

தமிழன்Feb 5, 2020 - 12:22:17 PM | Posted IP 162.1*****

ஒரு அரசியல்வாதி இப்படித்தான் இருக்கவேண்டும் . பாராளுமன்றமாக இருந்தாலும் சரி சட்டமன்றமாக இருந்தாலும் சரி அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும் . எதற்கெடுத்தாலும் கோஷம் போட்டால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்து நடக்க வேண்டும்.ரஜினி அவர்கள் மிக சிறப்பான கருத்துக்களை பதிவிட்டுள்ளார் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory