» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்து கடவுளை அவமதித்தாக நடிகர் யோகிபாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!!

புதன் 5, பிப்ரவரி 2020 11:24:14 AM (IST)இந்து கடவுள் முருகனை அவமதித்தாக நடிகர் யோகிபாபு மீது புகார் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மீது, இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது: தமிழ் சினிமாத்துறையில் சமீபகாலமாக இந்து கடவுள்களையும், இந்து மத உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளன. காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ஒரு படத்தில், அவர் முருகன் வேடத்தில் இருப்பது போன்ற காட்சி போஸ்டராக வெளியாகி உள்ளது. அதில் முருகனின் வாகனமான மயிலுக்குப்பதில், கிளியை போட்டு கிண்டல் செய்துள்ளனர். இது முருக பக்தர்களின் மனதை புண்பட வைத்துள்ளது. இதற்கு காரணமான நடிகர் யோகிபாபு மீதும், அந்த படத்தின் இயக்குனர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

thiruFeb 5, 2020 - 08:21:11 PM | Posted IP 162.1*****

குண்டா நல்லா இரு அதுக்கு இப்படி நடிக்காத ....கிறுக்கா ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory