» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மஞ்சு விரட்டில் ஆவேசமாக ஒடி வந்த காளை: அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுடன் உயிர் தப்பிய தாய்

சனி 18, ஜனவரி 2020 4:48:32 PM (IST)மஞ்சுவிரட்டின் போது ஆவேசமாக ஓடி வந்த காளை ஒன்று எதிரில் வந்த தாய் மற்றும் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த மஞ்சுவிரட்டை காண்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வருவார்கள். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தொழுவில் காளைகளை அவிழ்ப்பதற்கு முன்பாக, கட்டு மாடுகளாக வயல்வெளி மற்றும் கண்மாய் பகுதிகளில் மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். 

இதனை காண்பதற்கு மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நிற்பதால், அவிழ்த்து விடப்படும் காளைகள் பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்து காயங்களை ஏற்படுத்தும். அதேபோன்று நேற்று நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், ஆவேசமாக வந்த காளை ஒன்று, எதிரில் ஒரு பெண் தன் குழந்தையுடன் வந்ததை கண்டதும், காளை தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்றது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory