» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஒரு வருடத்தில் முடிக்கப்படும்: இஸ்ரோ மைய இயக்குநர் தகவல்

சனி 18, ஜனவரி 2020 4:31:09 PM (IST)

குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டம் ஒரு வருடத்தில் முடிக்கப்படும் என்று ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜராஜன், "மாணவர்கள் ஆசிரியர்கள் கொடுக்கும் பிராஜெட்டுகளை விலை கொடுத்து வாங்காமால், அவற்றை தாங்களே உருவாக்கும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு மட்டும் இல்லாமல் தனிமனித சுய ஒழுக்கம் மிக முக்கியம். மாணவர்கள் நேர்மறையான எண்ணங்களை மட்டும் கொள்ளுங்கள். படிப்பை தவிர்த்து வேறு எதையும் கவனத்தில் கொள்ளாதீர்கள். குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டம் ஒரு வருடத்தில் முடிக்கப்படும் என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory