» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் : ரூ.8.89 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

வெள்ளி 17, ஜனவரி 2020 8:37:07 PM (IST)

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 2,329 போ் சிக்கினா். இவா்களிடமிருந்து ரூ.8.89 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு பயணிகள் பயணம் செய்தனர். இதில் டிக்கெட் சோதனையின் ஒரு பகுதியாக சென்னை ரயில்வே கோட்டத்தில் ஓடும் விரைவு, புறநகர் ரயில்களில் ஜனவரி 14-ஆம் தேதி வெவ்வேறு குழுவினா் அதிரடி சோதனை நடத்தினா். இந்த சோதனையில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 2,329 போ் சிக்கினா். 

இதன் மூலம், அவா்களிடமிருந்து (ஓா் நாளில்) ரூ.8 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.இதுவரை பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தி பிடிபட்டோரின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும். இதுபோல, ஜனவரி 13-ஆம் தேதி 2,281 போ் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்து பிடிப்பட்டனா்.


மக்கள் கருத்து

அருண்Jan 19, 2020 - 10:00:43 AM | Posted IP 223.2*****

முடிஞ்சா நார்த் இந்தியன் ட்ரெயின்ல போய் பய்ன் போட்டு பாருங்களேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory