» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஞாயிறு 17, நவம்பர் 2019 6:14:34 PM (IST)

சிதம்பரம் நடராஜர் கோயில் பெண் செவிலியரை  தாக்கியதாக தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த செல்வ கணபதி என்பவரின் மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமைச் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். லதா சனிக்கிழமை இரவு நடராஜர் கோயிலுக்கு வந்தார். முக்குருணி விநாயகர் சன்னிதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு தீட்சிதரைக் கேட்டுக் கொண்டார்.ஆனால் அர்ச்சனை செய்யாமல், வெறும் தேங்காயை மட்டும் தீட்சிதர் உடைத்துக் கொடுத்துள்ளார். ஏன் அர்ச்சனை செய்யவில்லை என்று லதா கேட்ட போது, அவரை தீட்சிதர் தகாத வார்த்தைகளால் திட்டி, ஆத்திரத்தில் லதாவின் கன்னத்தில் அறைந்ததால் லதா நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து லதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருகில் இருந்த சக பக்தர்கள் லதாவை கன்னத்தில் அறைந்தது பற்றி தீட்சிதரைக் கேட்டுள்ளனர். லதாவின் கணவர் தனியார் தொலைக்காட்சிக்கு இது பற்றி கூறும்போது, என் மகனின் பிறந்தநாள், அதற்காக அர்ச்சனை செய்ய கோயிலுக்கு சென்றார். அர்ச்சனை செய்ய  சென்ற பொழுது  இந்த சம்பவம் நடந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கணும், ஏனென்றால் நாங்கள் தினமும் கோயிலுக்கு போறவங்க. இந்தத் தப்பு இன்னொரு முறை நடக்கக் கூடாது. மன நிம்மதிகாக, கோயிலுக்கு சாமி கும்பிட வர்றோம், அடி வாங்க வரவில்லை என்று கூறியுள்ளார்.இந்தச் சம்பவத்தை அடுத்து சிதம்பரம்நகர போலீசார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். நடராஜர் கோயிலில் சாமி கும்பிட சென்ற பெண்ணை கண்ணத்தில் அறைந்த தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்மே 3, 1574 - 09:30:00 PM | Posted IP 108.1*****

தீட்சிதன் என்றால் வழக்கு பதிவு மட்டுமே. ஆனால், முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சூத்திரன் என்றால் வீட்டுக்குள் ஏறி குதித்து கைது. மனுதர்மத்தின் ஆட்சிதானோ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory