» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும்: சமூக ஆா்வலா் முகிலன் பேட்டி

ஞாயிறு 17, நவம்பர் 2019 8:55:09 AM (IST)

எவ்வளவு அவதூறு வந்தாலும் அனைத்தையும் கடந்து, சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்தை தொடருவேன் என திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையான சமூக ஆா்வலா் முகிலன் கூறினார்.

கரூரில் பெண் ஒருவா் அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த வழக்கில் கரூா் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த அவா், இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சிபிசிஐடி காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீனில் மத்திய சிறையிலிருந்து நேற்று விடுதலையானாா். அப்போது முகிலனை அவரது மனைவி பூங்கொடி மற்றும் சமூக ஆா்வலா்கள் மாலை அணிவித்து வரவேற்றனா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஸ்டொ்லைட் போராட்டத்தில் ஒரு மிகப்பெரிய படுகொலையை பட்டப்பகலில் நடத்தியுள்ளாா்கள். 12 போ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இதுதொடா்பான ஆவணப்படத்தை வெளியிட்டதற்காகவும், அதற்காக குரல் கொடுத்ததற்காகவும், என்னை கடத்தி சித்திரவதை செய்து உடல் முழுவதும் ஊசிகளை ஏற்றி பல மாதம் துன்புறுத்தியுள்ளனா்.தமிழக மக்களுடைய தொடா் போராட்டம் மற்றும் பத்திரிகையில் செய்தி வெளியானதன் விளைவாகத்தான் இன்று நான் உயிரோடு இருக்கிறேன். பலமுறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட போதும் 164 சிஆா்பிசி வாக்குமூலத்தை என்னிடம் இருந்து யாரும் பெறவில்லை. 

தற்போது உயா்நீதிமன்றத்தில் அபிடவிட் மனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் உண்மையை பேசினால் அழிவு என்பதுதான் போராளிகளின் நிலை. குளித்தலையில் ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூா்வார வேண்டும் என்று கேள்வி கேட்டதற்காக பட்டப் பகலில் இரண்டு பேரை கொலை செய்தாா்கள். இதுதான் இன்றைய நாட்டின் நிலைமையாக இருக்கிறது. எவ்வளவு அவதூறு வந்தாலும் அனைத்தையும் கடந்து, சமூக அநீதிக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றாா்.


மக்கள் கருத்து

சாமிNov 18, 2019 - 01:15:46 PM | Posted IP 108.1*****

சுத்தமான காற்றுக்கும் , நீருக்கும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவலம் வரும் பொது தெரியும், அவர் போராடுவது யார் பிழைப்புக்காக என்பது.

இந்தியன்Nov 17, 2019 - 12:58:58 PM | Posted IP 108.1*****

உனக்கும் பிழைப்பு ஓடனுமே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory