» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

சனி 16, நவம்பர் 2019 6:01:54 PM (IST)

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது என வந்த புகார் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்துவிட்டு  பஞ்சமி நில விவகாரத்தை குறிப்பிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதைப் பார்த்த பாமக தலைவர் ராமதாஸ், முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் கட்டப்பட்டது என்றார். அதை மறுத்த ஸ்டாலின் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் தான் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் இந்த விவாகரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையில் முரசொலி அலுவலகம் தொடர்பாக விளக்கம் கேட்டும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஏழு நாட்களில் பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.தற்போது முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை சாஸ்திரி பவனில் நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory