» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலை திமுக நிறுத்த முயற்சிப்பதாக அதிமுக வதந்தி பரப்புகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

வெள்ளி 15, நவம்பர் 2019 5:26:48 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக அதிமுக அமைச்சர்கள் திட்டமிட்டு வதந்தி பரப்புகின்றனர் என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் உள்ள சட்டப்பேரவை அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் மாணவர்களுக்காக திமுக சார்பில் அனிதா பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பயிற்சி பெற்ற 128 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில் தமிழக அரசுதான் கவனம் செலுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக, அதிமுக கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், இது முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை திட்டமிட்டு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் பொய். உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதில்தான் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அதனால்தான், எஸ்.சி/எஸ்.டி இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாமல், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்து நாடகத்தை நடத்தினர். இட ஒதுக்கீட்டை முறையாகக் கடைபிடித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று தான் திமுக வழக்குத் தொடுத்தது என மு.க. ஸ்டாலின்  தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory