» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 428 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற பரிந்துரை

வெள்ளி 20, செப்டம்பர் 2019 5:51:17 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 428 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகலை ஏற்படுத்தியது. 

இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அவரும் இந்த சம்பவம் குறித்து தொடர்புடைய அதிகாரிகள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 428 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 428 பேரின் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்; கைது செய்யப்பட்ட நபர்களில் 80 சதவீதம் பேர் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் அவர்களது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என ஆணையத்தின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மக்கள் கருத்து

VetriSep 20, 2019 - 07:05:29 PM | Posted IP 162.1*****

சுட்டது யாருனுக்கு சொல்லுங்க யா...

K.ganeshanSep 20, 2019 - 07:01:07 PM | Posted IP 162.1*****

We welcome the Justice enquiry commission recommendation.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory