» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: அக் 4ல் வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 11:58:16 AM (IST)

சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரித்து அக்டோபர் 4-ம் தேதி வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் நீதிமன்றத்தில் அளித்துள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலை தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவுறுத்தியது. அதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளது. அதில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பணிகளை நிறைவு செய்து அன்றே புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி அப்பட்டியலை அச்சுப்பணிக்கு அனுப்ப வேண்டும். அக்டோபர் 3-ல் அச்சுப் பணிகளை நிறைவு செய்து பட்டியலை பெற வேண்டும். அக்டோபர் 4-ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அடுத்த நாள் அப்பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும்  என கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory