» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

சனி 24, ஆகஸ்ட் 2019 10:11:41 AM (IST)

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழகத்தில் நிலவக்கூடிய வருவாய் உதவியாளர் உத்தேச காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடிய இடங்களில் 91 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கோரப்பட்டுள்ளது.

இந்த வகையிலான காலிப் பணியிடங்கள் அதிகபட்சம் சென்னை மாவட்டத்தில் 31 இடங்களும், திருவண்ணாமலை, வேலூரில் முறையே 18, 25 இடங்களும் உள்ளன. இந்த ஆண்டில் பதவி உயர்வின் மூலம் நிரப்பக்கூடிய 1,384 வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 இடங்களும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 109 இடங்களும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory