» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு : மத்தியஅமைச்சர் மன்சுக் மண்டாவியா

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 6:24:36 PM (IST)
தூத்துக்குடியில் பல புதிய தொழிற்சாலைகள் வர வாய்ப்பு உள்ளது என மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் மன்சுக் எல். மண்டாவியா கூறியுள்ளார்.

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் கப்பல்கள் உள்ளே வரும் நுழைவாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி ரூ. 13 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது,  இந்த திட்டத்தை இன்று ஆய்வு செய்து அதனை பார்வையிட்ட மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மன்சுக் எல். மண்டாவியா , அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிலக்கரி இறக்குமதி தளம், வடக்கு சரக்கு தளம் மூன்று, ரூ. 58 கோடி 30 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் மார்ஷலிங் யார்டில் இருந்து துறைமுக பரிமாற்ற முனையத்திற்கும் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி உட்பட 139 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். துறைமுக அதிகாரிகளுடன் துறை வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துறைமுகம் பல வளங்களை கொண்டுள்ளது .இந்த துறைமுக சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்திற்கும் கொழும்பு துறைமுகத்துக்கும்  சராசரியாக 2.55 மில்லியன் சரக்கு பெட்டகங்கள் போக்குவரத்து நடைபெறுகிறது. அந்த அளவிற்கு வளம் கொண்ட தூத்துக்குடி துறைமுகத்தில் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கபடும் என உறுதி அளிக்கிறேன் . 

இத்துறைமுகத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் பல வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மெகா திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இங்கே பல தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்காக 900 ஏக்கர் இடம் தயாராக உள்ளது. இதன் மூலமாக பல புதிய தொழிற்சாலைகள் இங்கு வர வாய்ப்பு உள்ளது. 

இதன் மூலமாக புதிய தொழிற்சாலைகள் உருவாவதுடன் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும், இப்பகுதியில் முன்னேற்றம் அடையும். இந்த திட்டம் வரும் 2025ம் ஆண்டுக்குள் வடிவமைக்கப்படும் . நாட்டில் துறைமுகங்களை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சாகர்மாலா திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 200 திட்டங்களில் 123 திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக துறைமுகத்தின் சார்பில் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் மூலம் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கொட்டகை திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழக தலைவர் டி.கே.ராமசந்திரன், துணைதலைவர் வையாபுரி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

இவன்Aug 25, 2019 - 09:19:42 PM | Posted IP 162.1*****

தொழிற்சாலைகள் வந்தாலும் வடைநாட்டவனுக்கு முன்னுரிமை தான்.. நிறைய வடநாட்டுக்காரன் , பாணி பூரி விற்கிறவன் , பீடா வாயனுங்க எல்லாம் ரூம் போட்டு கொள்ளையடித்து போயிடுவான் ...

அருண்Aug 25, 2019 - 01:03:41 PM | Posted IP 162.1*****

மாசுகட்டுப்பாட்டு துறை சரியாக இயங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா காச வாங்கிட்டு ஜிப்ப கழட்டுவானுங்க

நிஹாAug 24, 2019 - 05:41:27 PM | Posted IP 162.1*****

ஏன் வரமாட்டார்கள். ஸ்டெர்லைட் செய்த கூத்து அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்கு முன்பிருந்து பல பெரிய தொழிற்சாலைகள் இன்றும் இயங்கி கொண்டுதான் உள்ளன.

மக்கா!Aug 24, 2019 - 08:20:39 AM | Posted IP 108.1*****

தூத்துக்குடில புதுசாக தொழிற்சாலையா....எவனாவது வருவான் இனி?!? வேலையாவது மண்ணாங்கட்டியாவது!!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory