» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : தமிழக கமாண்டோ படையினர் கோவை வருகை
வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 5:52:45 PM (IST)
தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழக கமாண்டோ படையினர் கோவை வந்துள்ளனர்.
இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு, மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழக கமாண்டோ படையினர் கோவை வந்துள்ளனர். அவர்கள் 10 குழுக்களாக பிரிந்து மாநகர எல்லைகளை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொள்ள உள்ளனர். இதனிடையே ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அபுதாஹீர் என்பவரை நாகை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
செவ்வாய் 26, ஜனவரி 2021 10:31:37 PM (IST)

விவசாய சேவைகளைப் பாராட்டி 105 வயது பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது : கனிமொழி வாழ்த்து
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:16:14 PM (IST)

மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா: கவர்னர் பன்வாரிலால் தேசிய கொடி ஏற்றினார்
செவ்வாய் 26, ஜனவரி 2021 12:11:16 PM (IST)

கோவில்பட்டி - கடம்பூர் இரட்டைப் பாதை பணிகள் பிப்ரவரி மாதம் நிறைவு பெறும்: ரயில்வே அதிகாரி
செவ்வாய் 26, ஜனவரி 2021 11:24:53 AM (IST)

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு: திரைப்பட இயக்குநா் பாலா நீதிமன்றத்தில் ஆஜா்
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:43:13 AM (IST)

மு.க.ஸ்டாலினிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
செவ்வாய் 26, ஜனவரி 2021 8:15:34 AM (IST)
