» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக - காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 4:32:42 PM (IST)

திமுக, காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்திற்காக திமுக டெல்லியில் போராட்டம் நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நாம் அனைவரும் இந்தியர்கள். அதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான திமுக, காஷ்மீர் விவகாரத்தில் குரல் எழுப்புவது பெருமை என பாகிஸ்தான் ரேடியாவில் கூறப்படுவதைவிட, பெரிய அவமானம், வெட்கித் தலைகுனியக்கூடிய விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியா முழுவதும் திமுகவுக்கு இந்த போராட்டம் ஒரு பின்னடைவு.

2ஜி வழக்கு, ஐஎன்எக்ஸ் வழக்கால், தமிழனுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. திமுக, காங்கிரசால் தமிழ்நாட்டுக்கே பெரும் தலைகுனிவு. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். முன்னாள் அமைச்சர் என்பதால், சிதம்பரத்திற்கு சிகப்பு கம்பளம் விரிப்பார்களா? ஒரு குடிமகனுக்கு உள்ள உரிமைகள் தான் அனைவருக்கும் உண்டு. இந்த பிரச்சினை வந்ததும் ப.சிதம்பரம் சிபிஐ அல்லது அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருக்கலாம். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்தனர்" இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

OpsssAug 24, 2019 - 04:23:33 PM | Posted IP 162.1*****

சுட்ட வடை ஜெயக்குமார்

ஆசீர். விAug 24, 2019 - 09:51:50 AM | Posted IP 162.1*****

ஆமா சோ பெரிய அரசியல் விஞ்ஞானி. போப்பா போ. பிறகு எதுக்கு பத்தொன்பது வருடம் வாய்தா கேட்டா வாய்தா ராணி

தனிஸ்லாஸ்Aug 23, 2019 - 10:15:34 PM | Posted IP 108.1*****

ஆதாரங்கள் எதுவும் இன்றி வெறும் அனுமானங்களை வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்று திரு "சோ" அவர்களே சொல்லி இருக்கிறார் - அதன்பிறகு நடந்தது எல்லாம் அரசியல் விளையாட்டு

இவன்Aug 23, 2019 - 07:10:30 PM | Posted IP 162.1*****

திருட்டு திராவிடத்தால் (திருட்டு திமுகவும் , திருட்டு அதிமுகவும்) நாட்டுக்கு தலை குனிவு , மக்கள் தான் திமுகவுக்கும் , அதிமுகவும் மாறி மாறி ஓட்டு போட்டால் நல்ல விடிவு காலம் இல்லை...

ஆசீர். விAug 23, 2019 - 05:36:11 PM | Posted IP 108.1*****

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை கேட்கப்போன ஜெயலலிதாவை அப்படியே கைது செய்து பரப்பன அக்ரஹாரா சிறையில் தள்ளப்பட்டபோது உங்கள் தலை நிமிர்ந்தா இருந்தது?? அது தீர்ப்பு இது விசாரணை கைது நினைவில் கொள்ளவும் மிஸ்டர் மைக் டைசன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory