» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி: நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைப்பு

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:35:56 PM (IST)

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. திடீர் உடல்நலக் குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வைகோ, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஓய்வின்றி அரசியலிலும் தீவிரமாகப் பணியாற்றுவதால், நிறைய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதாலும், பொது விழாக்களில் கலந்து கொள்வதாலும் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகோவுக்கு உடல்நலச் சோர்வு ஏற்பட்டதை அடுத்து இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

உடலில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிரச்னைகளை சரி செய்வதற்கும், ஆலோசனை களைப் பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி வைகோ ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20,21,22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

சாமிAug 19, 2019 - 10:44:51 AM | Posted IP 162.1*****

கைது நடவடிக்கை எதிர்பார்த்து இந்த நடவடிக்கை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory