» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல்நிலையத்தில் பெண் மர்மமான முறையில் மரணம் : வள்ளியூரில் பரபரப்பு

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 11:49:09 AM (IST)

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மகளிர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற  பெண் காவல்நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயர் மேனாக கிறிஸ்டோபர்  பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மீது கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வள்ளியூர் அனைத்து மகளிர்  காவல் நிலைத்தில் போக்ஸோ வழக்கு  பதிவாகியுள்ளதாம். இதனிடையே கிறிஸ்டோபர் தலைமறைவாக உள்ளார் .ஆனால் கிறிஸ்டோபர்  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள  உள்ள லீலாபாய்  என்பவரிடம் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பில்  இருந்துள்ளார். 

இதனை அறிந்த போலீசார் லீலாபாயிடம் விசாரணை   நடத்துவதற்காக நேற்றிரவு வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்பொழுது விசாரணையில் திடீரென மர்மான முறையில்  மரணமடைந்ததாக கூறப்படுகிறத.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Aug 18, 2019 - 05:49:13 PM | Posted IP 173.2*****

வேறென்ன? அடிச்சே கொன்னுட்டாளுக!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory