» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் கருத்துக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் : வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

சனி 17, ஆகஸ்ட் 2019 6:15:02 PM (IST)மக்கள் கருத்துக்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் அதன்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் கருத்து கேட்டு வருகிறார்கள். இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜலட்சுமி, மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், நெல்லை எம்பி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் நெல்லை மாவட்டத்துடன் இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

வள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய்கோட்டம் அமைக்கவேண்டும் என ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வலியுறுத்தினார். சங்கரன்கோவில், திருவேங்கடம், அம்பாசமுத்திரம் மக்கள், தங்கள் பகுதி தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சத்யகோபால், மக்கள் கருத்துக்கள் அறிக்கையாக அனுப்பி, அரசு ஆணை பிறப்பித்த பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற அலுவலகங்கள் அமையும் இடம் தேர்வு செய்யப்படும் என்றார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory