» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத் தம்பதி : திருநெல்வேலி எஸ்.பி. நேரில் பாராட்டு
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 6:17:45 PM (IST)

நெல்லை மாவட்டம் கடையம் அருகே முகமூடி கொள்ளையர்களை வீரத்துடன் விரட்டியடித்த முதிய தம்பதிகளை நேரில் சந்தித்து மாவட்ட எஸ்பி., அருண்சக்திகுமார் பாராட்டு தெரிவித்தார்.
கடையம் அடுத்த கல்யாணிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வரும் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் இருவர் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அரிவாளுடன் வந்து தாக்க முயன்ற கொள்ளையர்களை வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு தாக்கி முதிய தம்பதி விரட்டியடித்தனர். இருப்பினும் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களுடன் முதிய தம்பதி போராடிய சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார், தம்பதிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே நெல்லை அருகே கொள்ளையடிக்க வீட்டுக்கு வந்த மர்ம நபர்களை கணவன் - மனைவி இணைந்து போராடி அடித்து விரட்டிய நிலையில், அந்த தம்பதியின் வீரத்தை விஜய், அஜித் படங்களைச் சுட்டிக்காட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், தம்பதிகள் மெர்சல் காட்டி விட்டதாகவும், இது தமிழனின் நேர்கொண்ட பார்வை எனவும் கூறி விஜய் அஜீத் படங்களை குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்தால் திருடர்கள் பயப்படுவார்கள் எனும் தொனியிலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் நீடிக்கும் பருவமழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு
ஞாயிறு 15, டிசம்பர் 2019 2:59:46 PM (IST)

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்
ஞாயிறு 15, டிசம்பர் 2019 2:15:46 PM (IST)

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: நெல்லை, தூத்துக்குடி ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
ஞாயிறு 15, டிசம்பர் 2019 10:24:21 AM (IST)

கடனை திருப்பிக்கேட்டதால் மூதாட்டி கொலை?: பெண்ணிடம் போலீஸ் விசாரணை
ஞாயிறு 15, டிசம்பர் 2019 10:18:07 AM (IST)

அரசுப் பள்ளி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் : தமிழக அரசு திட்டம்
சனி 14, டிசம்பர் 2019 5:31:20 PM (IST)

பாட்டியை கொன்றுவிட்டு பேத்தியை கடத்த முயற்சி: ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்
சனி 14, டிசம்பர் 2019 5:24:00 PM (IST)

ஒருவன்Aug 13, 2019 - 06:40:58 PM | Posted IP 173.2*****