» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மோடியும், அமித் ஷாவும் ஹிட்லர்-முசோலினி என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார்: பாலகிருஷ்ணன்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 5:55:55 PM (IST)

மோடியும், அமித் ஷாவும் ஹிட்லர்-முசோலினி என்பதை ரஜினி விரைவில் புரிந்து கொள்வார்" என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுவரொட்டி ஒட்டிய மாணவர்களுக்கு பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மோடி அரசின் தலையாட்டி பொம்மைகளாக செயல்பட்டு வருகின்றனர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போல செயல்படுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஹிட்லரும் முசோலினியும் போல என்பதை ரஜினிகாந்த் விரைவில் புரிந்து கொள்வார்.மேட்டூர் அணை அபாய கட்டத்தை நெருங்கும் முன் படிப்படியாக தண்ணீரை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் சேமிக்க ஏதுவாக இருக்கும்.டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிட்டு காவிரி படுகையை மேம்படுத்த ஆய்வு குழு அமைத்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

இந்தியன்Aug 13, 2019 - 10:52:08 PM | Posted IP 108.1*****

மக்கள் நன்றாக கம்யூனிஸ்ட் புரிந்து உள்ளார்கள்

samiAug 13, 2019 - 07:05:53 PM | Posted IP 162.1*****

சம்பந்தம் இல்லாத உளறல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory