» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பா.ஜனதாவின் இன்னொரு கை ஆக அ.தி.மு.க. செயல்படுகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 4:32:08 PM (IST)

பா.ஜனதாவின் இன்னொரு கை ஆக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்..

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து அவர் தனது கருத்தை தெளிவாக கூறி இருக்கிறார். 

தமிழக மக்கள் நன்றாக அறிந்த ஒரு தலைவர் மு.க.ஸ்டாலின், நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லாதது ஏன்? அவரை யார் தடுத்தது. அங்கு மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசாங்கம் சரியான எந்த நிவாரண உதவிகளும் செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் பாதிப்புகளை பார்த்துவிட்டு வந்து இருக்கிறார். இனியாவது அரசு நிவாரண பணிகளை துரிதமாக செய்யட்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல், வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பா.ஜனதாவின் இன்னொரு கை ஆக அ.தி.மு.க. செயல்படுகிறது. மழையால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தனது மாநிலத்துக்கு வேண்டிய நிதிகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கின்ற அ.தி.மு.க. தமிழகத்துக்கு வேண்டிய நியாயமான நிதியை பெற்றுத் தர வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழ்தரமாக பேசி இருக்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாது. காஷ்மீர் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களை கைது செய்துவிட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அவர்களது குடும்பத்தினருக்கு கூட தெரியாத அளவுக்கு வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு யாரும் வெளியில் வர முடியாத நிலை உள்ளது. காஷ்மீரை பற்றி பேசுபவர்கள். முதலில் இதை புரிந்து கொண்டு பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

samiAug 13, 2019 - 07:05:10 PM | Posted IP 162.1*****

ஆனால் திமுக காங்கிரசின் இடதுகை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory