» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசியது மோடிக்குக் கேட்டுள்ளது: ரஜினி பேச்சு

திங்கள் 22, ஜூலை 2019 11:48:47 AM (IST)

கல்விக் கொள்கை பற்றி சூர்யா பேசியது பிரதமர் மோடிக்குக் கேட்டுள்ளது என காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். 

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினி, ஷங்கர், வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். சூர்யா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் காப்பான் பட பால்கள் வெளியிடப்பட்டன.

இந்த விழாவில் ரஜினி பேசியதாவது: சில வருடங்களுக்கு முன்பு நானும் கே.வி. ஆனந்துடன் இணைந்து படம் செய்திருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் பிறகு அது சரியாக அமையவில்லை. கமலின் இந்தியன் 2 நிச்சயம் வெற்றி பெறும். மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் எப்படி வரும் என ஆவலாகக் காத்திருக்கிறேன். தர்பார் படம் நல்லபடியாக வந்துகொண்டிருக்கிறது. தமிழாற்றுப்படை புத்தகத்தைப் படித்த பிறகு வைரமுத்து மீதான மதிப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. 

புதிய கல்விக்கொள்கை பற்றி ரஜினி பேசினால் மோடிக்குக் கேட்டிருக்கும் என்றார்கள். ஆனால் சூர்யா பேசியது மோடிக்குக் கேட்டுள்ளது. சூர்யாவின் கருத்தை நான் ஆதரிக்கிறேன். சூர்யா மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். மாணவர்கள் படுகிற கஷ்டத்தை நேரில் பார்ப்பவர் அவர். புதிய கல்விக்கொள்கையைப் பற்றி சூர்யா பேசியபிறகு அவருடைய இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானின் ஆகிய இருவரின் கலவையாக உள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அவர் இசையில் வசீகரா பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory