» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை - பொன்னார் ஆவேசம்

ஞாயிறு 21, ஜூலை 2019 5:19:09 PM (IST)

"அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை வரவேண்டாம் என சொல்வதற்கு காஞ்சிபுரம் ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் வருகின்றனர். இதனால் கடந்த வியாழன் அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இச்சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோர் அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் அறிக்கை வாயிலாக நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை தரிசனம் செய்ய வேண்டாம் என சொல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் யார்? இவ்வாறு கூற ஆட்சியருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? உடனே அவர் அந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும். இது தமிழகத்திற்கு தலைக்குனிவான ஒன்று. பக்தர்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி உணவு ஏற்பாடுகள் ஆகிய அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். தரிசனம் தொடர்பான உதவி வேண்டுமென்றால் திருப்பதி நிர்வாகிகளை கூட கொண்டு வந்து ஏற்பாடுகள் செய்யலாம். இவ்வாறு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் கூறினார்.


மக்கள் கருத்து

நிஹாJul 22, 2019 - 11:48:31 AM | Posted IP 108.1*****

தரிசிக்க வராதீர்கள் என்றால் தகுந்த ஏற்பாட்டை செய்ய முடியவில்லை என்று அர்த்தம். கண்டிப்பாக அது நிர்வாகத்தின் இயலாமையை ஒப்புக்கொள்வதற்கு ஒப்பானது. தலைகுனிவுதான்.

மக்கள்Jul 22, 2019 - 11:45:59 AM | Posted IP 162.1*****

மஹா பிரபு இன்னும் ஊருக்குள்ளே வந்துட்டயா ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory