» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊருக்குள் குட்டிகளுடன் புகுந்த கரடியால் அச்சம் : களக்காடு அருகே பரபரப்பு

ஞாயிறு 21, ஜூலை 2019 11:41:36 AM (IST)

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் மூன்று குட்டிகளுடன் கரடி ஒன்று மாலை, இரவு நேரங்களில் விளைநிலங்களில் நடமாடி வருகிறது.இரவில் வயலுக்கு செல்வோர் இதனால் அச்சம் அடைந்துள்ளனர். 

கரடியிடமிருந்து பாதுகாப்பதற்காக ஊர் இளைஞர்கள் திரண்டு இரவு நேரத்தில் தீப்பந்தத்துடன் காவல் காக்கின்றனர். கரடி குட்டிகளுடன் நடமாடுவது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு கரடியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான  முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கரடிகளை விரட்ட முடியவில்லை.  கரடிகளை பிடிப்பதற்காக வனப்பகுதிக்குள் கூண்டு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory