» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு : தி.மு.க. எதிர்ப்பு

ஞாயிறு 21, ஜூலை 2019 10:08:25 AM (IST)

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதா சட்டசபையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த மசோதா மீது தி.மு.க. உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசும்போது, ‘இந்த மசோதாவுக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. கோர்ட்டில் வழக்கு இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறது. எனவே தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முன் வர வேண்டும்’ என்று வலியுறுத்தினார். அவர் பேசி கொண்டிருந்தபோது, ஆளுங்கட்சி தரப்பிலும், எதிர்க்கட்சி (தி.மு.க.) தரப்பிலும் உறுப்பினர்கள் சிலர் அவரது பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் சில வார்த்தைகளை தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த ப.ரங்கநாதன், சில கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், ‘அமைதி காக்கவும், உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசிக்கொண்டிருக்கிறார் என்று கூறி, உறுப்பினர்களை அமைதிப்படுத்தினர். இருந்தாலும் கோபத்தில் இருந்த ப.ரங்கநாதன் தான் பேசி முடித்த பிறகு, தான் பேசும்போது குறுக்கிட்ட தன்னுடைய கட்சியின் சக உறுப்பினர் ஒருவரை பார்த்து கை விரலை காட்டி ஏதோ கூறினார். அதற்கு அந்த உறுப்பினரும் பதிலுக்கு தன் கை விரலை காட்டி, பதில் அளிக்க அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் சமாதானம் ஆனார்கள்.இந்த மசோதாவை தொடர்ந்து, ஆம்னி பஸ்களுக்கு புதிய வரி விதிக்கும் மசோதா, வீட்டு வாடகைதாரர் ஒப்பந்தம் உள்பட 17 மசோதாக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory