» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு மனு: நளினியை நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 25, ஜூன் 2019 3:30:07 PM (IST)

வேலூர் சிறையில் உள்ள நளினியை வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

மேலும், இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வேலூர் சிறையில் உள்ள நளினியை வரும் 5ந் தேதி மதியம் 2.15க்கு நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டனர். காணொலி வாயிலாக ஆஜராக நளினி விரும்பவில்லை என அரசு, சிறைத்துறை கூறியதை தொடர்ந்து இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory