» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றாலஅருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.

திங்கள் 24, ஜூன் 2019 6:51:55 PM (IST)




குற்றாலத்தில் குற்றாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.

குற்றாலத்தில்  ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் சீசன் காலமாக கருதப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி வரையில் குற்றாலத்தில் சாரல் மழை இல்லை. இதனால் அருவிகளுக்கு தண்ணீரும் வரவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த  இரு நாட்களாககுற்றாலம் மலைப்பகுதிகளில் மெல்லிய சாரல் தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் குற்றாலம் மெயின்அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் குற்றாலத்தில் சற்று அதிகமாகவே இருந்தது. 

குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் இல்லை. அவ்வப்போது குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் சீசனை அனுபவித்தனர். குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் இதே நிலைமை நீடித்தால் வரும் நாட்களில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள்  அதிகமாக குவிந்து விடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory