» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க போராட்டம் : அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திங்கள் 24, ஜூன் 2019 12:32:30 PM (IST)

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க நடத்தும் போராட்டம் மக்களிடையே எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை. பற்றாக்குறைதான் உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திமுக தண்ணீர் விஷயத்தை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. அது மக்களிடையே எடுபடாது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் தர முடியாது என திமுக கூறுவது தவறு. அது திமுக மக்களுக்கு செய்யும் துரோகம் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory