» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் சங்க தேர்தல் : பாக்யராஜ் அணியினர் விஜயகாந்திடம் ஆதரவு கோரினர்!!

வியாழன் 13, ஜூன் 2019 5:11:30 PM (IST)



தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர்கள் பாக்யராஜ், உதயா, பிரஷாந்த், குட்டி பத்மினி மற்றும் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர். விஜயகாந்தை சந்தித்த அவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். விஜயகாந்தை சந்தித்த பின் பேட்டி அளித்த இயக்குநர் பாக்யராஜ் கூறியதாவது: எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். எங்கள் அணி வெற்றிபெறும் என விஜயகாந்த் தெரிவித்தார்.நாடக நடிகர்கள் ஓட்டுக்கு பணம் பெறுவார்கள் என நான் கூறவில்லை என்றார்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jun 13, 2019 - 07:52:26 PM | Posted IP 162.1*****

உண்மை என்னவென்றால் தெலுங்கனுக்கும் தமிழனுக்கும் போட்டி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory