» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? -உயர்நீதிமன்றம் சுளீர்!!

வியாழன் 13, ஜூன் 2019 4:10:34 PM (IST)

நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டும்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

சேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் மகள் கவுசல்யா(19). இவர் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி காணாமல் போன பெண்ணின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் கூறுகையில், ‘புகார் கொடுத்து 3 மாதங்களை கடந்த பின்னரும், ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?. நயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. 

சாதாரண மக்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்காதா?. மாதம் ஊதியம் பெரும் அரசு ஊழியர்கள் அதற்கான வேலையை சரியாக செய்ய வேண்டும்.  உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் காணாமல் போய்விட்டால் இப்படிதான் அலட்சியம் காட்டுவீர்களா?’ என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது தொடர்பான அறிக்கையை வரும் திங்கட்கிழமை காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory