» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய வைகோ தி.மு.க. உடன் சேரவில்லையா?. ராதா ரவி கேள்வி

வியாழன் 13, ஜூன் 2019 4:03:08 PM (IST)

தன்னை சுமையாக நினைத்ததால் தி.மு.க.வை விட்டு வெளியேறியதாக நடிகர் ராதாரவி கூறினார். 

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.விற்கு வந்ததற்கு காரணம், என்னை அவர்கள் தூக்கிவிடவில்லை. சுமையாக நினைத்ததால் வெளியேறினேன். தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது. தி.மு.க.வின் மீது அதிருப்தி கிடையாது. ஆனால், மு.க.ஸ்டாலின் தற்போது சூழ்நிலை கைதியாக உள்ளார். அ.தி.மு.க. நான் பிறந்த வீடு. அம்மா, அம்மா என்று அழைப்பதால் இது எனக்கு தாய் வீடு. என்னை தற்காலிகமாக நீக்கியதற்கு ஓர் அறிவிப்பு கொடுத்திருக்கலாம். தேர்தலின்போது, புதுகோட்டையில் கருணாசின் செயல்பாடு கேவலத்தனமானது.

மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய வைகோ தி.மு.க. உடன் கூட்டணி சேரவில்லையா?. அதுபோல் தான் அவர்களுடைய செயல்பாடு இருக்கிறது. படையப்பா திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் பெண்ணை பற்றி பேசுவார். அப்படித்தான் நானும் மேடையில் பேசினேன்.ஒரு கட்டிடத்திற்கு 2 முறை அடிக்கல் நாட்டியது நடிகர் சங்க கட்டிடம் தான். நடிகர் சங்க தேர்தலில் தி.மு.க. தலையீடு உள்ளது. நான் புதுக்கோட்டைக்கு சென்றபோது பூச்சிமுருகன் தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து பேசுகிறேன். ராதா ரவி வந்தால் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என நாடக நடிக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

சங்க கட்டிடத்தை காட்டி சிலர் வெற்றி பெற நினைக்கிறார்கள். அவர்கள் தேர்தலின்போது, திரைப்படத்தில் நடித்து, அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கட்டிடத்தை கட்டுவோம் என கூறினார்கள். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. தற்போது விஷால் அணியை எதிர்த்து யார் நிற்பார்கள் என்று நினைத்தபோது ஐசரி கணேஷ் வந்தார். அவருடன் பாக்கியராஜ் இணைந்துள்ளதால் இந்த அணியே வெற்றி பெறும். இவர்களுக்காக நாங்கள் வாக்குகள் சேகரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory