» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குரூப் 4 தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் : ஜூலை 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளி 7, ஜூன் 2019 3:48:51 PM (IST)

குரூப் 4 தேர்வுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.  ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகக்தில் உள்ள அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புகின்றது. அந்த வகையில் தற்போது குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக வரும் 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வில் பங்கேற்பதற்கான வயது, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் வரும் 14-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறும். 100 மதிப்பெண்கள் தேர்வர்கள் தேர்வு செய்யும் மொழிப்பாடத்தில் இருந்தும் மீதமுள்ள 100 மதிப்பெண்ணில் 75 மதிப்பெண் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும் மீதம் உள்ள 25 கேள்விகள் திறனறி பகுதியில் இருந்தும் கேட்கப்படும் . இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory