» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் ‍: சத்யபிரதா சாஹூ

புதன் 22, மே 2019 3:40:22 PM (IST)

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்கும். மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்ட பின்னரே ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 

19 கம்பெனி  துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 17 ஆயிரத்திற்கும்  அதிகமானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு  எண்ணும் பணியில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்படுவார்கள். 1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். வெப் காமிரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும்  வாக்குகள் எண்ணப்படும். ஒரு சுற்று முடிய 30 நிமிடமாகும் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory