» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வாக்குகளுக்கும், ஒப்புகை சீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறு வாக்குப்பதிவு இல்லை: உயர்நீதிமன்றம்

புதன் 22, மே 2019 12:52:39 PM (IST)

வாக்குகளுக்கும், ஒப்புகைசீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட கோரிய முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதியன்று நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.  இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைசீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory