» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா, அறிமுகப்படுத்திய கட்டணமில்லா மின் திட்டத்தால் மின்வாரியத்திற்கு ரூ.7,000 கோடி இழப்பு?

புதன் 22, மே 2019 12:41:33 PM (IST)

ஜெயலலிதா அறிவித்த, முதல் 100 யூனிட்டுகள் மின்சாரத்திற்கு கட்டணமில்லை என்ற திட்டத்தினால் மின் வாரியத்திற்கு நஷ்டம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும், நஷ்டம் 78 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், கூறப்படுகிறது. மின்சார விற்பனை மற்றும் விநியோகத்தின் மூலமான விற்பனை வருவாய், 2016-17ஆம் நிதியாண்டை காட்டிலும், 2017-18ஆம் நிதியாண்டில் 277 கோடி ரூபாய் சரிந்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அறிமுகப்படுத்திய, முதல் 100 யூனிட்டுகள் மின்சாரத்திற்கு கட்டணமில்லை என்ற திட்டத்தின் மூலம், மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு சற்று அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

மின்வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்ட நிதி ஒதுக்கீடு உயர்வு, ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் நிலக்கரி விலை, மின் பகிர்மான கழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, முக்கிய காரணிகளாக இருப்பதாகவும், கூறப்படுகிறது.


மக்கள் கருத்து

ராம்போமே 22, 2019 - 05:43:54 PM | Posted IP 172.6*****

மக்களுக்கு பயன்தானே - கவுன்சிலர்கள் அடிக்கவில்லையே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory