» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

திங்கள் 20, மே 2019 3:32:06 PM (IST)

தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியானது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சாடினார். 

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். 2016-ல் கருத்துக்கணிப்பை பொய்யாக்கினோம். அதேபோல் இந்தமுறையும் பொய்யாக்குவோம். புதுவை உட்பட 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றிபெறும். தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியானது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு.

வறட்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையை சமாளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. அந்தந்த காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி சாலைகள் அமைக்கப்பட வேண்டும். வாகன எண்ணிக்கை தற்போது 300 மடங்கு அதிகரித்துள்ளது. 1 லட்சமாக இருந்த வாகன எண்ணிக்கை தற்போது 4 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் விபத்து அதிகரிக்கிறது.

100-ல் 7 சதவீதம் பேர் தான் புதிய சாலைகளை ஏற்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விபத்தை தவிர்க்கவும், இன்றை காலகட்டத்தின் வாகன நெரிசல் மற்றும் உயிர் பாதுகாப்பு காரணமாக இது அவசியமாகிறது.  இதில் அரசு தொடர்பாக மக்களிடம் திணிப்பது போன்ற செய்தி வெளியிடுவது சரியல்ல. இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது, திமுக ஆட்சிக்காலத்திலும் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்போதும் விவாசயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று பேசினார். 


மக்கள் கருத்து

பாலாமே 22, 2019 - 01:37:39 PM | Posted IP 172.6*****

என்னே சாமி அவர்களே பேரை மாத்திடீங்க போல இருக்கு.. உங்களுக்கு அது பொருந்தும்..

பிம்பிலிகா பிளாப்பிமே 21, 2019 - 05:07:32 PM | Posted IP 172.6*****

அவர் சொல்வதில் விஷயம் இருக்கிறது - இங்கே கருத்து கணிப்பு நடத்திய உள்ளூர் மீடியாக்கள் - ஒருதலை பட்சமானவை - வடக்கு மக்களுக்கு இங்கே இருக்கு இந்து வாக்கு வங்கி தெரியாது - என்னை பொறுத்த வரையில் - மத்தியில் பிஜேபி நானூறு இடங்கள் பெரும் - இங்கேயும் அதிமுக கூட்டணியே பெரும்பான்மை இடங்களை வெல்லும்

நிஹாமே 21, 2019 - 10:54:17 AM | Posted IP 162.1*****

கருத்து கணிப்பு பொய் என்றால் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும் என்ற கணிப்பும் பொய்தானே?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory