» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவுகள்

திங்கள் 20, மே 2019 8:32:46 AM (IST)

தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்து இருக்கிறது.  இந்நிலையில், நேற்றுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, ஓட்டுப்போட்டுவிட்டு வந்த வாக்காளர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு பற்றிய முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், பாரதீய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கின்றன.

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தமட்டில் தேர்தல் நடந்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவுக்கு பின்னர் தந்தி டி.வி.யின் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 19 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என்றும், 14 தொகுதிகளில் இழுபறி நிலை இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் தி.மு.க. கூட்டணிக்கு 29 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்றும், இந்தியா டூடே-ஆக்சிஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து இருக்கிறது. 

என்.டி.டி.வி. சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 25 இடங் களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 12 இடங்களும் கிடைக்கும் என்றும், சி.என்.என். நியூஸ்-18 சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணிக்கு 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிய வந்து உள்ளது.


மக்கள் கருத்து

பிம்பிலிகா பிளாப்பிமே 20, 2019 - 04:44:04 PM | Posted IP 108.1*****

வயசுக்கு வந்தா என்ன வராட்ட என்ன

தனி ஒருவன்மே 20, 2019 - 11:17:55 AM | Posted IP 162.1*****

நல்லது

இவன்மே 20, 2019 - 08:58:37 AM | Posted IP 173.2*****

திருட்டு திராவிட தெலுங்கன் ஆட்சியால் நாட்டுக்கு தரித்திரம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory