» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மழையால் வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு புதிய கட்டுப்பாடு

புதன் 5, டிசம்பர் 2018 11:25:22 AM (IST)

மழையால் வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என தமிழக அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக மழை காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பது வழக்கம். இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

அதில், மழை பெய்தால் இனி உடனே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளித்தால் அதை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும். மழையை பொருத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னர் விடுமுறை அளிக்க வேண்டும். மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும்.

திருவிழா போன்றவற்றிற்கு ஊள்ளூர் விடுமுறை விடும்போது அதனை ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory