» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:05:20 AM (IST)
கையில் அரிவாளுடன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' ஆக பதிவிட்ட வாலிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், தற்போது குடும்பத்துடன் ஆறுமுகநேரி பூவரசூரில் வசித்து வருகிறார். இவரது மகன் சூர்யா (26). இவர் தனது கையில் பெரிய அரிவாளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி, நாக்கை துருத்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து எழுந்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ரென்னீஸ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சூர்யாவை அதிரடியாகக் கைது செய்தார். பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 9 வழக்குகளும், பாளையங்கோட்டை மற்றும் நெல்லை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)

வீராணமங்கலம் பழையாற்றில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்: திரளான பெண்கள் பங்கேற்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:32:50 PM (IST)



தலைவன் வடலிAug 3, 2026 - 02:17:07 PM | Posted IP 162.1*****