» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் பயங்கரம்!!
சனி 28, ஜனவரி 2012 11:15:06 AM (IST)
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் கார்த்திக் (21). இவரும் தூத்துக்குடி, ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மரியக்கன்னு நாடார் மகன் சந்திரசேகரும் நண்பர்கள் கடந்த 2009ம் ஆண்டு தாளமுத்துநகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சந்திரசேகரை கார்த்திக் பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து நாங்குநேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். கடந்த வாரம் கார்த்திக்கின் அப்பா இறந்துவிட்டார். இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக கார்த்திக் ஜாமீனில் தூத்துக்குடி வ்நதார்
பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கார்ததிக் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது சந்திரசேகரின் தம்பி கார்த்திக் ராஜா மற்றும் 3பேர் பைக்கில் வந்து கார்த்திக்கை அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
தகவல் அறிந்த வடபாகம் போலீசார், படுகாயம் அடைந்த கார்திக்கை தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கார்த்திக் உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக கார்த்திக் ராஜா உள்ளிட்ட 3பேரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
rajaசனி 28, ஜனவரி 2012 - 06:29:02 PM | Posted IP 124.1*****
நல்ல ஊரு.... வாழ்க வளமுடன்
ஆத்தூர் நலம் விரும்பிசனி 28, ஜனவரி 2012 - 05:45:29 PM | Posted IP 159.0*****
நம்ம மாவடம் நல்ல கொலை மாவடம் இந்த விசயம் எல்லாம் நம் கலைக்டருக்கு தெரியாதா அவாடு குடுங்கப்பா பெஸ்ட் கொலைகார பட்டிணம் ,,,,,
vivekamசனி 28, ஜனவரி 2012 - 04:21:02 PM | Posted IP 117.2*****
வாட் இஸ் தி SP doing ??
முத்துகுமார்சனி 28, ஜனவரி 2012 - 12:52:02 PM | Posted IP 117.2*****
யை திஸ் கொலைவெறி ?
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)



baskerசனி 28, ஜனவரி 2012 - 09:34:13 PM | Posted IP 122.1*****