» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: நகர் ஊரமைப்பு அலுவலர் ஆய்வு
சனி 28, ஜனவரி 2012 10:59:14 AM (IST)

தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தும் இடம், நான்கு வழிச்சாலை அமைக்கும் இடங்களை சென்னை நகர் ஊரமைப்பு ஆணையர் ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திக் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி எதிரே புதியதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதே போல் லாரிகள் நிறுத்துவதற்கு மிகப் பெரிய அளவில் டிரக் டெர்மினல் அனைத்து வசதிகளுடன் அமைப்பதற்கு வேண்டிய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதற்கான இடமும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தின் அருகே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை ஆய்வு செய்ய சென்னை நகர் ஊரமைப்பு ஆணையர் ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திக் நேற்று தூத்துக்குடி வந்தார். ஆட்சியர் ஆஷிஷ்குமாருடன் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம் செய்யும் டிரக் டெர்மினல் ஆகிய இடங்களை ஊரமைப்பு ஆணையர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி 3ம் மைல் முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலும், 3ம் கேட் மேம்பாலம் இறக்கம் முதல் சுங்கச்சாவடி முன்பு வரையிலும் நான்கு வழிச்சாலை அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குநர் சண்முகம், ஏ.பி.ஆர்.ஓ குமார் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
tuti veeranசனி 28, ஜனவரி 2012 - 11:23:34 PM | Posted IP 59.92*****
வெரி குட் கலெக்டர் sir
அருண்சனி 28, ஜனவரி 2012 - 11:03:08 PM | Posted IP 78.10*****
உண்மையாகவே இது ஒரு நல்ல திட்டம், இதுதான் நாளைய்க்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும், ஒரு நல்ல விஷயம் நடக்குது என்றால் உடனே எதிருப்பு வருகிறது ஏன் ?
john Ponrajசனி 28, ஜனவரி 2012 - 06:52:26 PM | Posted IP 220.2*****
Really its not a suitable place for new stand, because already heavy trucks,tippers and load carriers ( harbour operation - import and export, sterlite trucks and others) are running in the same way. if new bus stand comes there means, we need auto stand,car stand and domestic user vehicles stand. mainly it is four way road. we can find very harsh driving in late nights. how our traffic police will control it. It will make to happen accidents very often. our government officals and district collector should think about all the future disadvantages and give report to Tamilnadu goverment. we should not waste people's money. Humble request to Collector to look it to this matter very seriously.
sankarசனி 28, ஜனவரி 2012 - 05:11:35 PM | Posted IP 65.25*****
Bus stand varathu nala mater than. Sipcot road la already acident athigam. Ithula busstand vera anga ya. Irukura bus stand ey maintain pana matikanga ithula puthusu vera. Elam Nama money money
சங்கர்சனி 28, ஜனவரி 2012 - 12:44:41 PM | Posted IP 59.92*****
நல்ல திட்டம் வாழ்த்துக்கள் அதிகாரிகளே விரைவாக செயல் படுத்த மக்கள் ஒத்துழைப்போம்
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)



sasikumarதிங்கள் 30, ஜனவரி 2012 - 09:23:46 PM | Posted IP 117.2*****