» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மர்ம நபர்கள் நடமாட்டம் பெண்கள் அச்சம்
வெள்ளி 27, ஜனவரி 2012 12:26:36 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு குறைவு காரணமாக பல சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. பைக் திருட்டு, விபச்சாரம், போன்றவைகள் தாராளமாக நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் எங்கோ ஒரு மூளையில் புறக்காவல்நிலையம் அமைந்துள்ளது. இது சமூக விரோத செயல்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.
இந்த காவல் நிலையத்தில் ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் மட்டுமே அந்த காவல் நிலையத்தில் உள்ளனர். சிலநேரங்களில் அவர்கள் மீதே தாக்குதல் நடைபெற்றுள்ளது. போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் உள்ள ரூ.4லட்சம் மதிப்பிலான நவீன கருவிகள் மாயமாகி உள்ளது. இதுவரை அதுகுறித்து எவ்விதமான துப்பும் கிடைக்கவிலலை.
இந்நிலையில் மகபேறு வார்டின் அருகே நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக ஒரு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகளின் உறவினர் என்ற போர்வையில் மர்ம ஆசாமிகள் தங்குகின்றனர். இவர்களில் சிலர் கூடத்தை ஒட்டியுள்ள ஜன்னல்களை இரவு நேரத்தில் நோட்டமிடுவது, படபடவென்று தட்டுவது, திறந்திருந்த ஜன்னல்களில் கைகளை விட்டு துலாவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மகபேறு வார்டில் தங்கியுள்ள பெண்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். நள்ளிரவில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் அடிக்கடி அலறல் சத்தம் கேட்கிறது. இதுபோன்று மருத்துவமனை பெண் ஊழியர்கள் தங்கியிருக்கும் அறைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதுகுறித்து பலர் சம்ந்த பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க்பபடவில்லை.
சிலசமயங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தட்டிக்கேட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு புறக்காவல் நிலையத்தில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் வார்ட்மேன்கள் நியமிக்கப்பட வேண்டும். என்று பொதுமக்கள், நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
Greson Gomezவெள்ளி 27, ஜனவரி 2012 - 06:32:24 PM | Posted IP 122.1*****
என்ன பப்ளிக் அல்ரெட்.. போலீஸ் போடா சொல்லணும்
samsunவெள்ளி 27, ஜனவரி 2012 - 01:48:04 PM | Posted IP 124.1*****
புப்ளிக்.அலர்ட்.
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)



அந்நியன்சனி 28, ஜனவரி 2012 - 03:04:11 PM | Posted IP 122.1*****