» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அழகர் பள்ளியில் விளையாட்டு மற்றும் குடியரசு தின விழா
வியாழன் 26, ஜனவரி 2012 6:41:31 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் பெற் றோர்கள் மனதில் இடம் பெற்றுள்ள் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் இன்று விளையாட்டு மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
விழாவிற்கு அழகர் பப்ளிக் பள்ளி நிறுவன தலைவர் எம்.ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி மேடையில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்த அவர் பள்ளி விளையாட்டு போட்டியினையும் தொடங்கி வைத்தார். பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கான 100, 200, மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், சாக்குப்பை துள்ளல், மேஜிக் கலெக்க்ஷன் என்ற புதுமையான விளையாட்டு நடத்தப்பட்டது.
இதில் குறித்த நேரத்திற்குள் 150 மீட்டர் தொலைவில் உள்ள ஆடைகளை அணிந்து கொண்டு கையில் குடையுடன் மேடை ஏறும் நிகழ்ச்சியும், பெற்றோர்களுக்கான மியூசிக்கல் சேர் போன்ற பிளையிங் கார்ட்ஸ் விளையாட்டும் மிக அருமையாக இருந்தது. இசைக்கு ஏற்ற ஓடுபவர்கள் இசை நிறுத்தப்பட்டு கூறப்படும் சீட்டுக்கட்டு கார்டில் உள்ள 4 வகையான இடங்களை தேர்வு செய்து நிற்கும் போட்டிக்கு பலத்த வரவேற்பு இருந்தது.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவல் சாரா பணியாளர் களுக் கும் போட்டிகள் நடத்தப்பட்டன,போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் முதல்வர் ஆஷாகுகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது வெற்றிப் பெற்ற பள்ளி மாணவ மாணவியர்களுடன் அவர்களது பெற்றோர்களும் மேடை ஏற்றப்பட்டு அவர்கள் முன்னிலையில் சிறார்கள் பாராட்டப்பட்டது மிகவும் புதுமையாக இருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)



suryaவியாழன் 26, ஜனவரி 2012 - 10:10:02 PM | Posted IP 117.2*****