» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் குடியரசு தின விழா 94 பேருக்கு கலெக்டர் விருது

வியாழன் 26, ஜனவரி 2012 6:27:41 PM (IST)

நாகர்கோவிலில் 63 வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடந்தன. 

கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் எஸ்.பி. பிரவேஷ்குமாருடன் சேர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு, விருதுகளை வழங்கி கலெக்டர் நாகராஜன் கவுரவித்தார். விழா மேடையில் இருந்த தியாகிகளுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் மரியாதை செலுத்தினார். பின்னர் பயனாளிகளுக் கும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அதிகாரிகளுக்கும் விருதுகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் 99 பேருக்கு ரூ. 7 லட்சத்து 55 ஆயிரத்து 788 மதிப்பி லான நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. காவல் துறை சார்பில் 44 பேர், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 47 பேர், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 94 பேருக்கு விருது வழங்கப்பட்டது. பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் நிகழ்ச்சியாக நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் எஸ்.என்.ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து தேரேகால் புதூர் பேர்ல் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் தொடக்கப்பள்ளி, நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எறும்புக்காடு மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி, நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேச பக்தி பாடல், வந்தே மாதரம், தேசிய ஒருமைப்பாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மொத்தம் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, சார் ஆட்சியர் வெங்கடேஷ், தலைமை குற்றவியல் நீதிபதி பால் துரை, மாவட்ட திட்ட அலுவலர் மந்திராச்சலம், ஏ.எஸ்.பி. தர்மராஜன், தனித்துணை ஆட்சியர் உத்தமன், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஹரிராம், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி மாரியப்பன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory