» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயற்சி: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
புதன் 6, மே 2026 5:20:49 PM (IST)
கல்லூரி மாணவியைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக் (22) என்பவருடன் 22 வயது மாணவி நட்பாகப் பழகி வந்துள்ளார். கார்த்திக்கிற்கு மதுப்பழக்கம் இருந்ததால், மாணவி அவரிடம் பேசுவதைத் தவிர்த்ததோடு, அவரது தொலைபேசி எண்ணையும் 'பிளாக்' செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், கடந்த 04.08.2022 அன்று மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், "ஏன் என்னிடம் பேசுவதில்லை?" எனத் தகராறு செய்துள்ளார். மாணவி அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், "என்னிடம் பேசாத நீ உயிரோடு இருக்கக் கூடாது" எனக் கூறி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை வெட்டிவிட்டுத் தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பினார்.
இது குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கைக் கைது செய்தார். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கொலை முயற்சி மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)


