» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் ஏப். 15-ல் பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் நாகேந்திரன் தகவல்
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:32:57 PM (IST)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி நாகர்கோவிலில் ரோடு ஷோ மேற்கொள்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், பிரதமர் மோடி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ரோடு ஷோ மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த எழுச்சி மிகு பயணத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள்" எனத் தெரிவித்தார்.இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தால் அரசியலில் புதிதாக எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் பாஜகவை மட்டுமே அதிகம் விமர்சிப்பதாகவும், இது பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு அவர் கொண்டுள்ள பயத்தையே காட்டுவதாகவும் நயினார் நாகேந்திரன் சாடினார்.
மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பேசிய அவர், தமிழக அரசு முறையான விரிவான திட்ட அறிக்கையைக் கொடுக்காததே இத்திட்டம் தாமதமாகக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும், சாத்தான்குளம் வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்படியானது என்றும், அதற்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
பேட்டியின் போது நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எம்.ஆர். காந்தி, மாவட்டத் தலைவர் கோபகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)


