» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அழகப்பபுரத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 278வது ஏடிஎம் திறப்பு விழா .

வியாழன் 19, ஜனவரி 2012 8:30:34 PM (IST)



அழகப்பபுரத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 278வது ஏடிஎம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அழகப்பபுரம் கிளையின் சார்பில் 278வது ஏடிஎம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை எஸ்.பீட்டர்பால் தலைமை தாங்கி திறந்து வைத்தார். 

கிறிஸ்தவ ஐக்கிய பேரவை துணை செயலாளர் சாந்தி அலெக்ஸ் குத்து விளக்கேற்றி வைத்தார். முதல் ஏடிஎம் கார்டை அழகப்பபுரம் பங்கு பேரவை முன்னாள் துணைத் தலைவர் பிலிப் சிலுவை மைக்கேல் வழங்க நாகர்கோவில் ஓய்வு முதன்மை கல்வி அலுவலர் ஜேக்கப் அலெக்ஸ் பெற்றுக் கொண்டார். 

முன்னதாக‌ மண்டல மேலாளர் ஏ.ஜெயச்சந்திர பால் வரவேற்றார். அழகப்பபுரம் கிளை மேலாளர் கே.உதயகுமார் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் அழகப்பபுரம் கிளை அதிகாரிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory