» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)
குமரி மாவட்டத்தில் அடகுக் கடை நடத்தி 75 பேரிடம் சுமார் 300 பவுன் நகைகளை மோசடி செய்த வழக்கில் ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் நகை அடகுக் கடை நடத்தி வந்த சைலஸ் (52), அவரது மனைவி நிர்மலா (45) மற்றும் மகன் அகில் எஸ். விகானோ (27) ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.அடகு வைத்த நகைகளைத் திருப்பச் சென்றபோது கடை பூட்டப்பட்டிருந்ததாகவும், கடை நடத்தியவர்கள் தலைமறைவானதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கோவையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த அகில் எஸ். விகானோவை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் 75 பேரிடம் 300 பவுன் நகைகள் மோசடி செய்யப்பட்டது உறுதியானது. கைது செய்யப்பட்ட அகில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது பெற்றோரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)

குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வளத் துறையினர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 3:43:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தீவிரம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 15, ஏப்ரல் 2026 10:54:53 AM (IST)

