» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி வந்த கேரள மாநில பொறுப்பு கவர்னர் பரத்வாஜுக்கு வரவேற்பு

செவ்வாய் 17, ஜனவரி 2012 6:58:43 PM (IST)



கேரள மாநிலத்தின் கவர்னராக, கர்நாடக கவர்னர் பரத்வாஜ் நேற்று கூடுதல் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.கன்னியாகுமரி வந்த‌ அவரை ஆட்சியர் மதுமதி வரவேற்றார்.

கேரள கவர்னர் எம்.ஒ.எச்.பாருக் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை தொடர்ந்து கேரள கவர்னருக்கான கூடுதல் பொறுப்பை கர்நாடக கவர்னர் பரத்வாஜிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முறைப்படி கேரள கவர்னர் பொறுப்பை பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார். 

திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான விழாவில் அவருக்கு மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாநில முதல்வர் உம்மன்சாண்டி, சபாநாயகர் கார்த்திகேயன், மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

கர்நாடக கவர்னரும், கேரள கவர்னர் பொறுப்பில் இருப்பவருமான எச்ஆர் பரத்வாஜ் இன்று கன்னியாகுமரி வந்தார். அவரை ஆட்சியர் மதுமதி, கன்னியாகுமரி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory