» செய்திகள் » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி ஒலி, ஒளி காட்சிக்கூடம் தமிழக அரசிடம் ஒப்படைப்பு: மத்திய சுற்றுலா வளர்ச்சி அறிவிப்பு
திங்கள் 16, ஜனவரி 2012 5:08:29 PM (IST)
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் சார்பில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்க ரூபாய் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பணி கள் நடந்து முடிந்தன. இதை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான லலித் பன்வார் நேற்று முன்தினம் கன்னியாகுமரி வந்தார்.பின்ணாற் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தை நிறைவேற்ற இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் டாக்டர் வரதராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப் பட்டார். 20 வருடங்களில் இந்தியாவின் 25 சுற்றுலாத்தலங்களில் இத்தகைய ஒலி ஒளி காட்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்தும் பீகார் மாநிலத்திலிருத்தும் இத்தகைய ஒலி ஒளி காட்சிக்கூடம் நிறுவ அழைப்பு வந்துள்ளது.
கன்னியாகுமரியில் 300 சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் இந்த ஒலி ஒளி காட்சியை கண்டுகளிக்கும் படியாக இது அமைக்கப் பட்டுள்ளது. இதில் 12 இருக்கைகள் மிக முக்கியமான விருந்தினர்களுக்காக தயாரிக்கப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வெள்ளோட்டம் பார்த்துவிட்டு இந்த ஒலி ஒளி காட்சிக்கூடத்தை தமிழக அரசிடம் ஒப்படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழக தமிழக பகுதியின் பொது மேலாளர் விஜயகுமார், ஒலி ஒளி காட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐயாத்துரை, ஹைச்.சி.எல். நிறுவன மேலாளர் குர்பீத் சிங் மார்வா, இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழக உதவி பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ் ஆகிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

சாம்பல் புதனான இன்று நெற்றியில் சாம்பல் பூசி நற்செய்தி வழங்கிய பங்கு தந்தையர்கள்
புதன் 22, பிப்ரவரி 2012 4:06:27 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : கன்னியாகுமரி மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்
புதன் 22, பிப்ரவரி 2012 1:25:18 PM (IST)

கொலை வழக்கில் தொடர்பு: அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் நீக்கம் : ஜெ.அதிரடி
திங்கள் 20, பிப்ரவரி 2012 4:29:02 PM (IST)

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலியர்கள்
வியாழன் 16, பிப்ரவரி 2012 11:39:07 AM (IST)

குமரியை தமிழகத்துடன் இணைக்கப் போராடிய தாணுலிஙக நாடாரின் பிறந்த நாள் விழா
புதன் 15, பிப்ரவரி 2012 8:46:41 PM (IST)


